யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதையடுத்து, இயந்திரப் பகுதிக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கூட்டமைப்பினர் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்
கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வரும் வரை எரிக்கப்பட்ட உதயன் இயந்திரப் பகுதி பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.50 மணிக்கு உதயன் பத்திரிகையின் இயந்திரப்பகுதி இனந்தெரியாத ஆயுத தாரிகளால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வருகை தந்த பொலிஸார் குறித்த பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நடத்த கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வருகை தரவுள்ளதாகவும் அவர்கள் வரும் வரை இயந்திரப்பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதுவரை இயந்திரப்பகுதி சீல் வைக்கப்பட்டுளளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.