செய்திகள்

சீனாவிடமிருந்து ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள இலங்கை முயற்சி!

சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்வதன் மூலம் இந்த சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் ஏற்கனவே இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஏற்கனவே சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் நீண்ட கால அடிப்படையில் பாரிய நன்மைகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *