குருதியும், கண்ணீரும், காத்திருப்புமாக நீண்ட தமீழீழ விடுதலைப் போராட்டம் சர்வதே, பிராந்திய ஆதிக்க சக்திகளின் உதவியுடன் நசுக்கப்பட்ட நாட்களில்.
ஈழத் தமிழ் மக்கள் எறிகணைகளாலும், கொத்துக் குண்டுகளாலும் கொன்றொழிக்கப்பட்ட நாட்களில், ஆதரவு தர யாருமற்று அநாதரவாக தமிழ் மக்கள் தவித்து நின்ற நாட்களில் தன் இனமக்களைக் காக்க தன் உடலில் தீயிட்டு இன்னுயிரை ஈகம் செய்த போராளி முத்துக்குமார்.
தமிழீழ மக்கள் படும் சொல்லொணாத் துயரங்களை, அவலங்களை கண்டு துடித்திட, இனப்படுகொலையிலிருந்து ஈழ மக்களைப் பாதுகாத்திட உயிர்தரவும் தொப்புள்கொடி உறவுகள் உள்ளார்கள் என்பதனை தன் உயிரை ஈகம் செய்து உணர்த்தியவன் முத்துக்Fமார்.
தமிழ் இனத்தை பிரித்திருந்த சகல எல்லைக் கோடுகளையும் தன் தியாகத் தீயினால் பொசுக்கியவன்
எம் கரிகாலனின் அக்கினிக் குஞ்சான தமிழின விடுதலை, தமிழ்மொழி அரியணை ஏறும் கனவை ஈழப்பரப்பிலிருந்து தமிழினம் வாழும் உலகின் திசையெங்கும் விசிறிவிட தன் உடலில் தீயிட்டவனே முத்துக்குமாரா!
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!
அடுத்து விரியும் தமிழின உரிமைப்பேரர், விடுதலைக்களங்களின் ஆரம்பம் என்றுணர்த்தி வரலாற்றின் திருப்பு முனைக்கு முதல் விதையாய் விழுந்தவன் நீ
நீ விதையாய் விழுந்த உன் நினைவு நாளில்
உன் இலட்சியங்களை, உன் கனவை நாம் சுமந்து பயணிப்போம் என உறுதி எடுக்கின்றோம்.
தொன்மை மிகு எம் தமிழ்மொழி காக்க, எம் இனம் காக்க உயிர்தந்து விதையான மாவீரர்களின் வரிசையில் உலகத் தமிழ் இனத்தை ஒன்றிணைக்க உயிர் தந்தவனே.
எம் இனிய தமிழ்மொழி காக்க, எம் தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்க ”தமிழன்” என்ற ஒற்றைச் சொல்லில் இணைந்து பயணிக்க தாய்த் தமிழகத்தில், ஈழத்தில், புலம்பெயர் தேசங்களில் எங்கு வாழ்ந்தாலும் தமிழராய் கரம் கோர்க்கும் இனிய வரலாறு இன்றைய நிதர்சனம்.
உன் கனவு நனவாகும்.
தமிழ் இனம் தமிழ்ப் பகை முடிக்கும்
தமிழ் மொழி காக்கும்
இன உரிமை மீட்கும்.
மாவீரன் முத்துக்குமாருக்கு வீர வணக்கங்கள்.
தமிழர் களம்
தை 27