எங்கள் குழுச் சாரண ஆசிரியர் திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுக்கு இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…!
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முனனாள் குழுச் சாரண ஆசிரியராகவும்,புகழ் பூத்த பிரபல விலங்கியல் ஆசிரியராகவும் சிறப்புடன் சேவையாற்றிப் பின்னர் யுத்தகாலத்தில் நெருக்கடி மிகுந்த காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின். அதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசான் திரு.கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னாரது புகழுடல் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள அவரது “சாந்தம்” இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை (16.02.2019) அன்று முற்பகல் 9.30 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்குத் தகனக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அவரது மாணவர்களுக்கும்,அவரால் உயர் நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சாரணர் களுக்கும், உற்றார்,உறவினர்களுக்கும் , வடமராட்சி வடக்குப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர் களுக்கும் அறியத் தருமாறு அவரது மருமகன் திரு.ந.ஜெயவீரசிகாமணி (Marine Engineer) அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்கள் விலங்கியல் பாட ஆசிரியராகவும்,குழுச் சாரண ஆசிரியராகவும், சாரண பயிற்றுநராகவும் ஆளுமை படைத்த கல்வி நிர்வாக சேவை அதிகாரி யாகவும் இருந்து எங்களை சிறந்த நிர்வாகி யாகவும், பல்துறை ஆற்றல்கள் மிக்கவர்களாகவும் வாழ வழிகாட்டியதுடன் , ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரன் ரவீந்திரன் அவர்களை இந்த மண்ணுக்கு அளித்து> இன்று மீளாத்துயில் கொண்டிருக்கும் எங்கள் ஆசான் அமரர் கோ.செல்வவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக் கின்றோம்…..!
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,அவர் நேசித்த கல்விச் சமுகத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின் றோம்….