அன்னை பராசக்தி அம்மன் ஆலயத்திற்கு புதிய வசந்த மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய வசந்த மண்டப.அடிக்கல் நாட்டுவிழா
வெள்ளிக்கிழமை (08.03.2019)இன்று அதிகாலை 6. 00 மணி தொடக்கம் 7.00 மணிவரையுள்ள சுப வேளையில் திருக்கல் நாட்டப்பட்டது.
இவ்வைபவத்திற்கு முன்னால் வட மாகாண சபை உருப்பினர்களான ச.சுகிர்தன்
M.K சிவாஜிலிங்கம் அவர்களும், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ.கருணானந்தராசா அவர்களும், நகரசபை துனைத்தவிசாளர் ஆ.ஞானேந்திரன் அவர்களும், மற்றும் கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன் அவர்களும் ,அபிவிருத்தி உத்தியோகத்தரான யோ.சுதாகர் அவர்களும், மற்றும் வல்வை மானாங்கானை ஊரைச்சேர்ந்த பெரியோர்கள், அன்பர்கள் சூழ இந்நிகழ்வு இடம்பெற்றது.
முன்னால் வடமாகாண சபை உருப்பினர் ச.சுகிர்தன் அவர்களால்(10,000,00) பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வசந்த மண்டபம் அமைப்பதற்கான திருக்கல் இன்று நாட்டப்பட்டது.