ஈழத்தமிழர்களுக்கு வரலாற்று ரீதியான இறையாண்மை இருந்தது. அது இடையில் சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. மீண்டும் ஈழத்தமிழர் இறையாண்மையை விடுதலைப்புலிகள் வென்றெடுத்தார்கள். தங்களுக்கான வங்கிகள், பள்ளிகள், காவல்துறை என்று தமிழீழ இறையாண்மை அரசினை நடத்தினார்கள். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இனப்படுகொலை அழிவுக்கு தீர்வுக்கான சுதந்திர தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பு என்று தோழர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் நேற்று (13.04.2013) சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு சென்னை, தியாகராய நகர். கோபாதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் உரை:
தமிழீழ பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – கொளத்தூர் மணி!













Leave a Reply