உயிர்ப்பூவை ஒரு கணத்தில் ஊதிவிட்டு வெடியதிர்வுடன் கலந்துபோனவர்களின் கனவு இன்னும் அப்படியே கனவாகவே கிடக்கிறது. என்ன செய்யப்போகின்றோம் இவர்களுக்கு.எங்களுக்காகவே இவர்கள்
உடல்சிதறி போனார்கள்.எங்களின் எதிர்கால சந்ததிக்காக.எல்லாம் எங்களுக்காக.
கவிதைவரிகள் தோற்றுவிடும் இவர்களின் காவியம்சொல்ல புறப்பட்டால்.
எரிமலையின் சீற்றத்தை நெஞ்சுக்குள் சுமந்து எம்மண்ணில் கால்படர்ந்து திரிந்த எம் கரும்புலிகளின் அடிமுடி அறிய முயலும் கவிதை இது.