கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலைய 35 வயது உதைபந்து வல்வை வெற்றி போட்டியின் ஆட்டநாயகன் வல்வை சண்முகதாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
கம்பர்மலை கலாவாணி சனசமுக நிலையம் நடாத்தும் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 9 நபர்கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 20/03/2019 இடம்பெற்ற
ஆட்டத்தில் வல்வை அணியை எதிர்த்து யங்லயன்ஸ் அணியானது மோதியது.
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை அணியானது3-1என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
வல்வை அணிசார்பாக சண்முகதாஸ் 2 கோல்களை பெற்றுக்கொடுத்து போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.