உடலை பொலிவடைய செய்யும் கேரட் : ஆய்வில் தகவல்!
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன் உடல் பொலிவடையும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புனித ஆண்ட்ரிவ்ஸ் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்.
அதுபற்றி விஞ்ஞானி இயான் ஸ்டீபன் கூறியதாவது: பழங்கள், காய்கறிகள் அதிலும் கேரட் மற்றும் பிளம்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரின் மேனியும் பொலிவு ஏற்பட்டு பளபளக்கும். குறிப்பாக உடல் எடை ஆரோக்கியமாவதுடன், முன்பு போல் இல்லாமல் அதிக வசீகரத்துடன் காணப்படுவார்கள். வெறும் 2 மாதங்கள் மட்டுமே பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொண்டால் இதன் பிரதிபலனை உடனே உணர முடியும் என தெரிவித்தார்.