ஒரு சமூகத்தின் இன்றைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பனவற்றுக்கு பின்னால் மௌனமாக நின்றுகொண்டிருப்பது அந்த சமூகத்தின் வயதில் மூத்த மக்கள் ஆகும்.
முதுமையிலும்,தள்ளாமையிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்கள்தான் இன்று நாம் வசதியாக
நடப்பதற்குரிய சமுதாய பாதையை செப்பனிட்டவர்கள் ஆவர்.அவர்களையும் அவர்களின்
பணியையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்துக்கொண்டே இருப்பதுதான் உண்மையான ஒரு
நாகரீக சமூகத்தின் கடமைஆகும்.
அந்த அடிப்படையில் எமது ஊரில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் முதியோரில் வசதியும்,
வருமானமும் குறைந்த முதியோருக்கும்,ஆதரவுஅற்ற முதியோருக்குமான ஒரு உதவித்திட்டத்தை
பிரித்தானியாவில் வசித்துக்கொண்டிருக்கும் திரு.இளையதம்பி தெய்வேந்திரனும் (குட்டிஅண்ணா)
அவரின் மனைவி திருமதி.வதனி தெய்வேந்திரனும் இணைந்து 2010ம்ஆண்டு யூலைமாதத்தில்
ஆரம்பித்திருந்தனர்.
மிகவும் பெருந்தன்மையுடன் இந்த உதவித்திட்டத்தை பிரித்தானியாவில் இயங்கும் வல்வை
நலன்புரிச்சங்கத்தினூடக வல்வெட்டித்துறையில் இயங்கும் தாய்ச்சங்கமான வல்வை ஒன்றியத்தின் மூலமாக வழங்கஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் 19முதியோருக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கப்படுவதுடன் ஆரம்பித்த இந்த
‘பூரணம் முதியோர் உதவித்திட்டம்’ இன்று 25 முதியோருக்கு தனது உதவியை விரிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மட்டும் அல்லாமல் வசதிகள்அற்ற முதியோரின் மரணச்சடங்கு,இறுதிக்கிரியைகளுக்கான
உதவிகளும் ‘பூரணம் முதியோர் உதவித்திட்டம்’ மூலம் கொடுக்கப்பட்டும் வருகின்றது.
எமது சமூகத்தின் முன்னோடிகளான முதியோர்களுக்கு உதவும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவரும் திரு.திருமதி தெய்வேந்திரன் தம்பதிகளின் உதவும் திட்டங்களுக்கு என்றும்
vvtuk.com இணையம் தனது ஒத்துழைப்பையும் நல்லாதரவையும் வழங்கும் என்று கூறிக்கொள்ளுகின்றோம்.
எல்லோருக்கும் முன்னுதாரணமான இந்த செயற்திட்டத்தினை நன்றியுடன் வரவேற்கின்றோம்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 29.01.2012அன்று வல்வையில் நடைபெற்ற ‘முதியோர் கௌரவிப்பு நிகழ்வு ‘ சம்பந்தமான காட்சிகள் இவை.