வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 76 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் பெருவிளையாட்டுக்கள் வரிசையில் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையேயான லீக்சுற்றிலான 9 நபர் உதைபந்தாட்டச்சுற்று போட்டியின் இன்றைய முதலாவது போட்டியாக தீருவில் எதிர் இளங்கதிர் வி.கழகம் மோதியது.
ஆட்ட நேர முடிவில் தீருவில் வி.கழகம் 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
சிறந்த ஆட்ட வீரனாக தீருவில் வி.கழகத்தைச் சேர்ந்த கரன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியாக நேதாஜி எதிர் ரேவடி வி.கழகம் மோதியது.
ஆட்ட நேர முடிவில் எதுவித கோல்களும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
சிறந்த ஆட்ட வீரனாக ரேவடி வி.கழகத்தைச் சேர்ந்த ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.