அண்மையில் இலங்கை வந்து திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவர்களின் விஜயம் தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுள்ளார் எனச் செய்திகள் வந்துள்ளன.
இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியவுடன் தனது அதிகாரிகளை அழைத்து அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஒன்பது பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்த நிலையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தது.
அங்கு அவர்கள் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன் கொழும்பு திரும்பியதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதனையடுத்தே இந்தக் குழுவினரின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகமுற்ற ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கை ஒன்றினை அதிகாரிகளிடம் கோரியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.