Search

சினிமா போக்கில் சட்டசபையில் ஜெயலலிதா – விஜயகாந்த் மாறி மாறி பேச்சு சவால் !

திங்கட்கிழமை தமிழக சட்டசபை கூடியதை அடுத்து  இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

அதற்கு சந்திரகுமார் மீண்டும் எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.இவரின் கேள்விக்கு விடையளித்த  ஜெயலலிதா, விலை ஏற்றத்திற்கு பின் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக கூறி கொந்தளித்தார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார். இதற்கு அதிமுக

உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.

இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பெரும் அமளியாக இருந்தது.இதைத் தொடர்ந்தே தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் மாறி மாறி தங்களில் யார் ஜெயிப்பது என்று பேசினார்களே தவிர மக்களுக்கான பேச்சாக இது அமையவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *