அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிப் போனோம் கணனி தொழில்நுட்பம் கணக்காகசேர்ந்துவிட்டோம் – 83 O/L வல்வை நண்பர்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிப் போனோம் கணனி தொழில்நுட்பம் கணக்காகசேர்ந்துவிட்டோம் – 83 O/L வல்வை நண்பர்கள்
பள்ளிப்பருவத்தின்

பசுமை நினைவுகளை

பகிர்ந்துகொண்ட

உறவுகளே!

நட்புக்குநன்றி சொல்லி

நலத்துடன்வாழ வாழ்த்துக்கள் சொல்கின்றேன் .

நீங்கள்படித்த காலங்களை

நினைவூட்டமுன்

நிமிர்ந்துநிற்கிறான்

உன் பிள்ளை .

மகள் மட்டும் என்ன

குறைந்தாபோனாள் ?

பல்கலைக்கழகம்

பட்டமும்வாங்கி

பக்கத்தில்நிற்கிறாள் .

83 நினைத்துப்பார்த்தால்

அங்கொன்றும்இங்கொன்றுமாய்

சிதறிப்போனோம் .

கவலை விடுக

கணனி தொழில்நுட்பம்

கணக்காகசேர்ந்து விட்டோம் .

விடுபட்டவர்

இணைந்திடுக.

காணாமல்போனோர்

கடவுளின்பாத சரணம்

அடைந்தோர்

கண்ணீருடன்வணக்கம்

சொல்வோம்.

தொடரட்டும்வல்வையின் நட்பு

வீரம் மட்டுமன்றி

அன்பும் விளைந்தபூமி

வல்வெட்டித்துறை

கவிதை வடித்தவர்

கமலினி- கனடா

Leave a Reply

Your email address will not be published.