வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் சைனிங்ஸ் அணி இன்று அரையிறுதி ஆட்டத்தில் நேதாஜி அணியுடன் மோதியது.
இப்போட்டியில் சைனிங்ஸ் அணி பிரசாந் மற்றும் துளசிராம் ஆகியோரின் சிறப்பான கோல்கள் மூலம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதியில் றெயின்போ அணி இளங்கதிர் அணியுடன் மோதியது. இப்போட்டியில் றெயின்போ 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது
இறுதியாட்டத்தில் றெயின்போ எதிர் சைனிங்ஸ் மோதவுள்ளன.