வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பமாகியது.
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது.
இன்றைய முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர்A அணியினை எதிர்த்து ரேவடி B அணியும் ,மோதியது இதில் இளங்கதிர்A அணியானது 10:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் சைனிங்ஸ்A அணியினை எதிர்த்து உதயசூரியன் அணியும் மோதியது இதில் சைனிங்ஸ்A அணி 09:02 என்ற கோல்கணக்கில் சைனிங்ஸ்A வெற்றி பெற்றது.