மே 18. 10ம் ஆண்டு நினைவு நாள்.
எம் இரத்த உறவுகளே! உம்மை நாம் இழந்து இன்றைக்கு 10ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும்,
எம் அனைவரது மனதிலும் உம் நினைவுகள் அழியவில்லை, மறக்கவில்லை.
மே 18. இன்று உம்மை தேடி வந்தோம்.
முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ கனக்கிறது. நெஞ்சம் விம்மி அழுகிறது.
அன்றைய யுத்தஒலி, எம் அழுகைஒலி இன்றும் இந்த மண்ணில் கேட்க்கிறது.
எம் புனித தெய்வங்களே கரம் கூப்பி தொழுகின்றோம்.
நிம்மதியாய் தூங்குங்கள் உங்கள் ஆத்மா சாந்திஅடையும், உங்கள் கனவும் ஒருநாள் நனவாகும் நாம் உள்ளவரை.
வன்னியூர்சஜீதா