பருத்தித்துறை பிரதேச செயலக 2019 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவின் போது பங்கு பெட்டி சிறந்த பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை தமதாக்கிய வல்வை விளையாட்டு கழகத்தின் மகளிர் அணிக்கான கௌரவிப்பு இடம்பெற்றது
வல்வை விளையாட்டுக் கழகத்தால் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே நடாத்தப்பட்ட 9 நபர்கள் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் வல்வை வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இன்று மாலை தீருவில் மைதானத்தில் நடைபெற்றுள்ளது
இறுதி போட்டியில் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
இரு அணிகளும் பரபரப்பாக ஆடிய விளையாட்டு விளையாட்டு கோல் இடப்படாமல் சமநிலையில் முடிவுற்றது
நடுவர் அவர்களினால் தண்ட உதை வழங்கப்பட்டு சைனிங்ஸ் வெற்றி பெற்றது
வல்வையின் இறுதி உதை- றெயின்போ விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது
சிறந்த கோல் காப்பாளராக சைனிங்ஸ் சேர்ந்த அபிநயம் தெரிவு தெரிவு செய்யப்பட்டசெய்யப்பட்டார்
இறுதிப்போட்டி ஆட்டநாயகன் – செந்தூரன் (சைனிங்ஸ்)
தொடரின் சிறந்த விளையாட்டுக் வீரன் – பிரசாந் (சைனிங்ஸ்)
தொடரின் சிறந்த பின்கள வீரன் -பிரகாஷ் (றெயின்போ)












Leave a Reply