வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர்”சங்க இறுதி உதை இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்ட சைனிங்ஸ்A அணி
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இன்றைய இறுதி ஆட்டத்தில்(01/06/2019) இளங்கதிர்A அணியினை எதிர்த்து சைனிங்ஸ்A அணியானது மோதியது.
இப்போட்டியில் இளங்கதிர்A அணியானது4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
இளங்கதிர்A கபில் (2) இரு கோலினையும், தனுசன் (1) ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.. மேலும் மற்றைய கோலானது ஒன்கோல் முறை மூலம் பெறப்பட்டது.
இன்றைய”போட்டியின் ஆட்டநாயகன்(Man of the match) :− கபில்ராஜ்(இளங்கதிர்)
தொடராட்ட நாயகன்( Man of the serish) :− பிரசாந்(சைனிங்ஸ்)
சிறந்த கோல்காப்பாளர்( Best goal keeper):− கஜிதரன்( இளங்கதிர்)
சிறந்த”பின்கள வீரர்(Best defend):− விதுஷன்(இளங்கதிர்)
இளங்கதிர் அணியானது இச்சுற்றுத்தொடரின் ஐந்து இறுதியாட்டங்களிலும் மோதியமை குறிப்பிடத்க்கது.
அத்துடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் சம்பியனாகியது..
இரண்டாமிடத்தினை சைனிங்ஸ்A அணிபெற்றுக்கொண்டது..
மூன்றாமிடத்தினை ரேவடிA
அணியானது”பெற்றுக்கொண்டது..
வெற்றிபெற்ற இளங்கதிர்A அணிக்கு20000ரூபா பணப்பரிசிலுடன் வெற்றி கிண்ணமும்
இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்ட சைனிங்ஸ்A அணிக்கு 15000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும்
மூன்றமிடத்தினை பெற்றுக்கொண்ட ரேவடிA அணிக்கு 5000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது..