மரண அறிவித்தல்
வேலும் மயிலும் ஞானகுரு
தோற்றம் : 10.05.1951 மறைவு : 12.06.2019
வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , யாழ் மின்சார நிலைய வீதி “ஞானம் ரெக்ஸ்ரைல்ஸ்” உரிமையாளருமான வேலும் மயிலும் ஞானகுரு அவர்கள் 12.06.2019 இன்று புதன்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் , மகேஸ்வரியின் அன்பு மகனும் காலஞ்சென்ற குமாரசாமி மதனசுந்தரியின் அன்பு மருமகனும் ஆவார். அன்னார் சூரியகுமாரியின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னார் மகீதா, அஜந்லால், திசோக்லால், விவேக்லால், மாதுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரபாகரன், சிவமுருகன், மதுவந்தி, சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும் மிதுஷா, அபிரா, ஹர்சனி, அனுக்சன், ஹரித், கிருத்திஸ், வாசன், நித்திஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சோதிநாராயணசாமி, காலஞ்சென்ற குணசுந்தரம், சண்முகசுந்தரம், நிலாவொளியம்மா, வசந்தாதேவி, கலாராணி, விமலாதேவி ஆகியோரின் சகோதரரும் அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம், காலஞ்சென்ற தங்கவடிவேல், விஜயரத்தினம், பாலசிங்கம், பார்வதிதேவி, யோகலக்சுமி, சந்திரகுமாரி, ரஞ்சனகுமார், ஜெயகுமார், காலஞ்சென்ற மோகன்குமார், சாந்தகுமாரி, விஜயகுமாரி, வசந்தகுமாரி, சரீஸ்குமார், ராஜேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம்
அன்னாரின் ஈமக்கிரியையாவும் அவரது இல்லத்தில் இடம் பெற்று 16.06.1019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Ajanth (Canada) – 001 647 802 9263
Thisok (Canada) – 001 416 6242714
Vivek (France) – 0033 751508432
Praba (London) – 07404046137
Mathu (Valvettithurai) – 0094 773844494