வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
நீச்சல் தடாகம் 30.06.2019 அன்று திறப்புவிழா நடைபெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினாால் இரு வாரங்களின் பின் பிற்போட்டுள்ளது திறப்பு விழா திகதி பின்னர் அறியத்தரப்படும்
மேற்படி நீச்சல் தடாகம் ஆனது மொத்தமாக 10 கோடி ரூபா செலவில் செய்யப்பட்டு வருகின்றது.
ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களின் நினைவு நீச்சல் தடாகமாக மலர இருக்கின்றது.இவை வல்வை ரேவடி உல்லாச கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
நீச்சல் தடாகத்திற்கு மொத்தமாக 7இலட்சம் லீட்டர் நன்னீர் பெறுவது மிகக் கடினமாக இருப்பதனால் கடல் நீரினை நன்னீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.
அதற்காக ஒரு கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரமும்.
125kw மின்பிறப்பாக்கியும் மின் கம்பங்கள் மின்குமிழ்கள் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 30Kw (கிலோவாட்ஸ்) பெறக்கூடிய சூரிய சக்தியில் இருந்து மின்பிறப்பாக்கி சூரிய கலம் (சோளர்) ஒரு கோடியில் பொருத்தப்பட உள்ளது.
முதலாவது நீச்சல் தடாகம் ஆனது முழுமை பெற இக்கிறது.
இரண்டாம் நீச்சல் தடகம் 2 1/2வயது தொடக்கம் 5 வயதிற்கு முற்பகுதியும் 5வயது தொடக்கம் 10 வயதினருக்கு பிற்பகுதியுமாக நீந்தக் கூடிய சிறிய தடாகமும்
மூன்றாவதாக குத்து கரணம் செய்யும் வகையிலான நீச்சல் தடாகம். இரண்டாம் மூன்றாம் நீச்சல் தடாகத்திற்காக 10 கோடி ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.
நீர் தடாக பகுதியை சுத்தம்,சீராக்கம் செய்யப்படவும் உள்ளது.
தற்பொழுது நீர் நிரப்புவதற்காக வல்வெட்டித்துறை நகரசபை பருத்தித்துறை கரவெட்டி மற்றும் அயல் நகரசபை பிரதேச சபைகளில் இருந்தும் நீர் நிரப்புவதற்தற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது .
இவ்முழுமையான முயற்சியை கடின உழைப்பின் மூலம் முன்னாள் நகரசபை தவிசாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்,M.K.சிவாஜிலிங்கம் அவர்களினால் கிடைக்கபெற்றுள்ளது.
இவ்நீச்சல் தடாகமானது திறப்பு விழாவினை தொடர்ந்து நகர பிதா க.கருனாணந்தராசா அவர்களிடம் கையளிக்கப்பட்டு நகரசபையினால் முழுமையாக பராமரிக்கப்படவுள்ளது.