பெப்ரவரி 4.தமிழர்களின் துக்கதினம்.தமிழர்கள் வரலாற்றின் கறுப்புநாள்.1948ம்ஆண்டு இதே பெப்ரவரி4ம்திகதிதான் ஈழத்தமிழ்மக்களின் உரிமை அனைத்தும் சிங்களபேரினவாதத்திடம் பிரித்தானிய
ஆட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டநாள்.
தமிழர்களின் இறைமையும் அரசுரிமையும் இதற்குமுன்னரே பறிபோய்இருந்தபோதிலும் 1948 பெப் 4ம்திகதி சிங்களஇனவாதிகளிடம் எமது உரிமைகள் தாரைவார்க்கப்பட்ட நாளில் இருந்துதான் தமிழினஅழிப்பு சிறீலங்காவில் மோசமானது.
பெரும்பான்மைஇனத்தை பெரும்பான்மையாக கொண்ட சிங்களபாராளுமன்ற அமைப்புமுறையின்மூலம் எமது மொழிஉரிமை,எமது கல்விஉரிமை,எமது வாழும்உரிமை என்பனவற்றை சட்டங்கள்மூலம் பறித்து
இறுதியில் ஒருபெரிய இனஅழிப்பை எம்மக்கள்மீது நடாத்திவிட்டு இன்று சிங்களம் தனது சுதந்திரதினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடுகிறது.
திறந்தவெளிச்சிறைச்சாலைகளாகவே தமிழ்மண்முழுதும் இப்போது இருக்கின்றது.யாரும் எப்போதும் கொல்லப்படலாம் என்ற நிலையே தொடர்கிறது.
எமது இனத்தின்ஆன்மாவும் அதன் உயிரோட்டமான நகர்வும் பலவந்தமாக தடுக்கப்பட்டுவருகின்றது.
இன்னும் சிறைச்சாலைகளுக்குள் எமது உறவுகள் வாடுகின்றார்கள்.
எந்தவிதமான குறைந்தபட்ச உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்குவதற்கு சிங்களம் மறுத்துவருகின்றது.
இந்தநிலை இன்னும்சில காலம் தொடர்ந்தால் ஈழத்தில் தமிழினம் அழிந்துவிடும்.
சிங்களத்தின் சுதந்திரதினத்தை எமது துக்கதினமாக நாம் வெளிக்காட்டவேண்டும்.
சர்வதேச நடைமுறைகளுக்கேற்ப ஒரு தேசியஇனத்துக்கே உரித்தான சுயநிர்ணயஉரிமையை நாம் பெறுவதற்கான திடசங்கற்பத்தை இந்தநாளில் நாம் வரித்துக்கொள்ளவேண்டும் என்று vvtuk.com இணையம் வேண்டுகோள் விடுக்கின்றது.
வீழ்வது தவறல்ல.வீழ்ந்து கிடப்பதுதான் பெருந்தவறு.
எழுவோம்.ஒன்றாவோம்.