வல்வெட்டித்துறை சந்தி வடிகால் மிகவும் பழமை வாய்ந்தது.தற்போது பழுதடைந்த பகுதியை நகரசபையினால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.வீதி அதிகார சபை கவணத்திற்கும்
ஏனைய பகுதி வீதி அதிகார சபையினால் செப்பமிடப்பட வேண்டும் இல்லையேல் மீண்டும் பிரதான வீதியின் மேற்தளம் உடைந்து வீழ்வதன்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
அத்தோடு 751,766 ஆகிய பிரதான வீதிகள் மிகமிக நீண்ட காலமாக அசௌகரிய வீதியாகவே கணப்படுகின்றது.
தற்பொழுது புதிய சொகுசு பேருந்துகளும் அரச பேருந்துகளும் இராணுவ கனரக வாகனங்களும் இவ்வீதியை முழுமையாக பயன்படுத்துவதினாலும் நகர மற்றும் வீதிகளிலும் மிகவும் நெருக்கமான போக்குவரத்தாக காணப்படுகின்றன.இதனால் விபத்துகளும் ஏற்படகூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன.
பாடசாலைகள், கோயில்கள், தேவைலையங்கள்,பொலிஸ் நிலையம் மைதானங்கள் என பரந்து கிடக்கும் பிரதேசத்தின் வீதி மட்டும் நலிவுற்று காணப்படுகின்றதோடு, பாடசாலை நேரங்களில் நெருக்கடி மத்தியில் அவதியும் மாணக்களையும் காணக்கூடியதாக உள்ளது.
கரையோர வீதியாக இருப்பதனாலும் எரி பொருள் போக்குவரத்து மீன் ஏற்றுமதி வாகணங்களும் இலபகமாக வந்து செல்கின்றன
அருகாமையில் வைத்தியசாலை இருப்பதால் நோயாளர் வண்டியும் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மரக்கறி,மீன் சந்தை வங்கிகள் என அரசுக்கு வருமானத்தை ஈட்டி தந்த வண்ணமுள்ள பிரதேச வீதி முழுமையாக புணரமைக்க படவேண்டும் என மக்களின் நீண்ட கால அவாவக உள்ளது.அத்தோடு வேதனை தரும் விடயமாகவும் உள்ளது ஏனைய பிரதேச வீதிகள் செப்பனிடப்பட்டும் இவ்வீதி மட்டும் அவ்வவ்ப்போது சல்லியை விசிறி தாரை ஊற்றி மக்களை ஏமாற்றுவது போல் அமைந்துவிடுகின்றது.