விசேட நிகழ்விற்காக ஜப்பான் செல்லும் ஈழத்து சாதனை மாணவர்கள்
ஜப்பான் புகோகா நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 தமிழ் மாணவர்கள் இன்றையதினம் பிற்பகல் ஜப்பான் செல்லவுள்ளதாக அறியமுடிகிறது.
இலங்கையில் இருந்து குறித்த மாநாட்டிற்கு 8 மாணவர்கள் செல்லவுள்ளதாகவும், அதில் 3 தமிழ் மாணவர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு செல்லவுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த நவாஸ்கண் நதி, மகேந்திரன் திகலோலிபவன் மற்றும் வவுனியாவை சேர்ந்த B.ஹரித்திக்கண்சுஜா என்ற மாணவியும் உள்ளடங்கப்பட்டுள்ளார்.
இவர்களில் இரு யாழ் மாணவர்களும் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றும், வவுனியா மாணவி 197 புள்ளிகளை பெற்றும் சாதனை படைத்த மாணவர்களாவர்.
நீண்ட இடைவெளியின் பின் தமிழ் மாணவர்கள் ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.