மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா) அவர்கள் 15/07/2019 திங்கட்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற வேலும்மயிலும் தங்கனம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற உலகசேகரம் செல்வரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
அன்னார் பாலசுப்பிரமணியம் (பாலப்பா), நந்தகோபால், அருட்பெருநாதன்(சின்னான்) மனோகரம்மா, காலஞ்சென்ற ஆதிஅருணாசலம் (ஆதி), காலஞ்சென்ற சிதம்பரநடராஜா (குட்டித்துறை), ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
யாழினி மற்றும் நிதுஷனின் பாசமிகு மாமனாரும், இந்திராதேவி, புவனேஸ்வரி, கதிர்காமலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
மதியழகன், சிவசூரியன், கவிதா, இந்திரஜோதி, ஏழுமலை, பாலேந்திரா, சித்திரா ஆகியோரின் சிறிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்