Search

மரபுரிமையை நிலைநாட்ட திருகோணமலை கண்ணியா பகுதியில் திரண்டனர் தமிழர்கள்.

திருகோணமலை கன்னியா வென்நீர்ஊற்று போராட்டம்

மரபுரிமையை நிலைநாட்ட திருகோணமலை கண்ணியா பகுதியில் திரண்டனர் தமிழர்கள்.

பல அச்சுறுத்தல் மத்தியிலும் பல இளைஞர்கள் திரண்டனர் …

கண்ணியா பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு அதில் புத்த விகாரை கட்டப்படுவதை எதிர்து திரண்டனர் இளைஞர்கள்.

திருகோணமலை கன்னியா சுடு களம்.

அடக்குமுறை ! எமை அடக்கும் முறை!

ஆயுதங்களில்லையா வெறும் தமிழராய்தான் ஒன்றிணைந்தோம்
இரண்டாயிரத்துஒன்பதோடு உந்த இரும்பெல்லாம் பழகிப்போச்சு!
ஆனையிறவு சண்டைக்கு ஆயத்தமாய் நிற்பதுபோல் கன்னியாவில் இராணுவம்!

அமைதியாக தானே
எங்கள் உரிமைக்காக
குரல் கொடுத்தோம்
கருவை சுமக்கும்
விதைகளின் பிரசவத்தை
மண்ணிட்டு “மூடி”
மறைத்திட முயலும்
முட்டாள்தனத்தை
ஆட்சி அதிகாரத்தை
கையில் வைத்திருக்கும்
சிலமூடர்கள்
செய்யத் துணிகின்றார்கள்
“விருட்சமாய்” வளர்கிறது
என்பதை மறந்து!

நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று
நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப்
பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார்
பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று !
வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம்
வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால்
பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே
பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே !

பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும்
பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள்
ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று
கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால்
கள்ளிப்பால் ஊட்டிசிசு கொல்லல் போன்று
வேல்கொண்டு குத்தியவன் கையி லேயே
வெதுசெய்யக் கொடுத்திட்டார் மீண்டும் வேலை !

வல்லரசு களெல்லாம் ஒன்று கூடி
வழங்கிட்டார் அதிகாரம் திருடன் கையில்
கொல்லரசா நிலைநாட்டும் நீதி தன்னை
கொன்றதினை நியாயமென்றே தீர்ப்பு ரைக்கும்
எல்லாமும் இங்கிருக்கும் தமிழர் தம்முள்
எள்ளளவும் ஒற்றுமையே இல்லா மைதான்
சொல்லியென்ன தமிழ் தலைமையெல்லாம்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை !

அழைத்துச்சென்ற பொலிசார் முன்னிலே
ஆதின முதல்வருக்கு ஆத்தின தேத்தண்னி
முகத்தில் ஊற்றினார்கள்! ஆரென்றும் கேட்கவில்லை !

முட்டுக்கள் பலத்தோடு நடக்கிறது நல்லாட்சியாம்!!

#கன்னியா.

– #மயிலையூரான்-




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *