வல்வை றெயின்போ மென்பந்து சம்பியனை
நேதாஜி இளைஞர் விளையாட்டு கழகம் தட்டிச்சென்றது.
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் 76ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள், 11 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில்
நேதாஜி எதிர் ரேவடி அணிகள் மோதின
முதலில் துடுப்பெடுத்தாடிய நேதாஜி அணி 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக நேதாஜி அணி சார்பாக
தருண் 58 (32)
பிரகதீஸ்வரன் 42 (12)
தர்சன் 17 (12)
ஓட்டங்களை பெற்றனர்.
134 எனும் வெற்றியிலக்கை நோக்கி ஆடிய ரேவடி அணி 10 பந்துப்பரிமாற்றத்தில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தது 78 ஓட்டங்களை மட்டும் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது.
55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேதாஜி அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.