Search

1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!அமரர் சபாரெத்தினம் பரமேஸ்வரி

1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாரெத்தினம் பரமேஸ்வரி

தாயின் மடியில் 17 . 08 .  1942       இறைவன் அடியில் 24.02.2011

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிலாபம் குசலையை வதிவிடமாகவும் கொண்ட சபாரெத்தினம் பரமேஸ்வரி அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி


எங்கள் எல்லோரையும் நல்வழியில் ஆளாக்கிய ஆருயிர் அம்மாவே … விண்ணை நோக்கி நீ விரைந்திட்ட நாளாய், நீங்கள் எங்களை விட்டு மறைந்த இந்நாளில் உங்களுடன் வாழ்ந்த அந்நாட்களை நினைத்து உருகுகின்றோம்.
உங்கள் கண்ணின் மணியாய் பிள்ளைகளை வளர்த்தீர்கள், அம்மா என்று அழைப்பதற்கு நீங்கள் இல்லையே…
அம்மா உங்கள் குரல் கேட்காமல் எங்கள் மனம் தவிக்கின்றது. ஐயா என்று நீங்கள் அவரை அழைப்பதற்க்கு நீங்கள் இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் ஐயா தவிக்கின்றார்…

மாமியாராய் இல்லாது அன்னையாய் வழிகாட்டிய உங்களை நினைத்து வாடும் மருமக்கள்…
ஒவ்வொரு நாள் காலையிலும் விழித்தெழும்போது உங்களை தேடும் பேரன் பேத்திகள் …
உற்ற உடன் பிறப்புகளின்
 ஓப்பற்ற சகோதரி நீயாம், உயிருக்குயிராய் உடன்பிறப்புகளை நேசித்தாயம்மா…
கண்ணுக்குள் நின்று காட்சிதரும் அம்மாவே, விண்ணோடு சென்று மறைந்தாலும் உங்களோடு வாழ்ந்த அந்த இனிய நாட்கள் என்று வருமோ என ஏங்கி தவிக்கின்றோம் அம்மா…
என்றும் உங்களை அன்போடு நினைத்துருகும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள்…எமது குடும்பத்தின் குலவிளக்காய் இருந்து கடந்த 24 .02 . 2011 அன்று சிவபதம் எய்திய எங்களின் அன்புத்தாய் திருமதி சபாரெத்தினம் பரமேஸ்வரி அவர்களது 1 ஆம் ஆண்டு திதியை முன்னிட்டு, கிரியைகள் 13 .02 .2012 அன்று எமது சிலாபம் இல்லத்தில் நடைபெறும்.தகவல்,
கணவன், பிள்ளைகள்
ரவி : 0094 3222 59585 (சிலாபம்)
சண்முகம் : 079 4150 4126 (லண்டன்)
சிறி : 079 5856 8514 (லண்டன்)
நாதன் : 001678 0457 4090 (கனடா)







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *