ஐசிசி வெளியிட்டுள்ள உலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர். இந்திய வீரர்களில் 10வது இடத்திற்குள் இடம்பிடித்த ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.
முன்பிருந்ததை விட 3 இடங்கள் முன்னேறி சச்சின் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வீரர் அஜர் அலியுடன் இந்த இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.