தமது வர்த்தகநலன்களுக்காகவும்,வேறு நலன்களுக்காகவும் இந்தியா எதையும் செய்யும் என்பதை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் கண்டுகொண்டது.மனிதஉரிமை,சுதந்திரத்துக்கான ஆதரவு என்று வெளியில் வேசம்போட்டாலும் தமது நலன் என்றுவரும்போது இந்தியா எவரையும் கைவிட தயங்காது என்பதற்கு மீண்டும் ஒரு சரித்திரஉதாரணம் இது.
திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டு பிரச்சனை என்பதால் தலையிட முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சீனா சென்றுள்ள கிருஷ்ணா, அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் சுயாட்சிப் பகுதி திபெத் என்றும் சீனாவுக்கு எதிராக இந்திய மண்ணில் இருந்து கொண்டு எவரும் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கிருஷ்ணா கூறினார்.
திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா உதவ தயாராக இருப்பதாகவும் கூறிய கிருஷ்ணா, சீனாவுடனான எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணாவின் சீன பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசு, சீனாவின் திபெத்திய நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.