கனடாவின் புகழ் பெற்ற தமிழ் வானொலியான சி.எம்.ஆரில் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில்…
புலம் பெயர் ஈழத் தமிழ் இளையோர் இசைப் பாடல்களிலும், திரைப்பட முயற்சிகளிலும் மிக விரைவாக முன்னேறி வருகிறார்கள்… அந்த வகையில் வளரும் இளம் பாடகி அர்ச்சனாவின் பேட்டி சென்ற வாரம் கனடாவின் புகழ் பெற்ற தமிழ் வானொலியான சி.எம்.ஆரில் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியானது. இந்தப் பேட்டி காணொளி வடிவில் தயாரித்து இங்கே தரப்படுகிறது. இவர் சமீபத்தில் பாடிய வை திஸ் கொலவெறி புதிய பதிப்பு தற்போது ஐந்து இலட்சம் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் இப்பாடல் டி.வி.டியாக விற்பனை செய்யப்படுகிறது. விற்பனையில் ரொப் பைவ் கொலைவெறி பாடல்களில் முன்னணி இடத்தைத் தொட்டுள்ளது. மேலும் அர்ச்சனா, தமிழ்நாடு ஹரிச்சரன் குரல் கொடுத்து வஸந்தின் இசையில் கண்ணன் சிதம்பரநாதனின் வரியில் வெளியான வல்வை எக்கோ தயாரிப்பான என்னினமே.. என்ற பாடல் சென்ற ஆண்டு மத்திய கிழக்கில் இருந்து வெளியாகும் அல் ஜஸீரா தொலைக்காட்சியில் வெளியாகி பல மில்லியன் உலகப் பார்வையாளரை தொட்டமை குறிப்பிடத்தக்கது. என்னிசைப் பயணம் என்ற புதிய மியூசிக் ஆல்பத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. இதன் அடுத்த பாகம் அடுத்த வாரம் வெளிவரும்.