ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும்.
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்.vvtuk26@gmail.com
பெப்ரவரி 10
நிகழ்வுகள்
- 1991 – வன்னி மீதான சிங்களதேச இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால்முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
- 1763 – பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
- 1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
- 1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
- 1846 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில்பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
- 1863 – அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
- 1870 – கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).
- 1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- 1914 – யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
- 1931 – புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
- 1954 – வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்காதாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
- 1964 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
- 1996 – சதுரங்கக் கணினி “டீப் புளூ” உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
பிறப்புகள்
- 1887 – ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)
- 1890 – போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)
- 1902 – வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)
- 1910 – ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)
இறப்புகள்
- 1837 – அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
- 1912 – ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)
- 1918 – ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)
- 1923 – வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)