விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அண்ணாவின் தாயார் காலமானார்!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி ஜெயம் என்ற மாவீரரின் தாயார் லண்டனில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா பாவற்குளத்தில் 16 – 03-1947 பிறந்த பாலகுரு காளீஸ்வரி என்ற குறித்த தாயார் நேற்று 31-03-2020 லண்டனில் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அவருடைய நோய் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
போர்க்காலத்தில் தன்னுடைய கணவனை இழந்த அவர் 1989 ஆம் ஆண்டு மற்றுமொரு பிள்ளையையும் இழந்திருக்கின்றார்.
இறுதிப்போரில் மூத்த தளபதி ஜெயம் போரில் உயிர் துறந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.