வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா
தற்போதைய இடர்நிலையுணர்ந்து தாயகத்தில் கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் உறவுகளுக்கு தாயுள்ளத்தோடு உதவி செய்ய வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியாவினால் 260 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
தினசரி கூலி வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்த கிளிநொச்சி விநாயகபுரம் போன்ற 04 பகுதி மக்கள் கொரோனா அச்சுறுத்தல் பின்னணியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச பல பகுதிகளான KN11 கிரம அலுவலர் பிரிவைச்சேர்ந்த கிருஷ்ணபுரம் 53 குடும்பங்கள், விநாயகபுரம் 92 குடும்பங்கள், KN14 கிரம அலுவலர் பிரிவைச்சேர்ந்த அம்பாள்குளம் 20 குடும்பங்கள், அனந்தநகர் 20 குடும்பங்கள்,KN44 கிரம அலுவலர் பிரிவைச்சேர்ந்த பரந்தன் 61 குடும்பம் மேலும் பதிவற்ற வறிய 14 குடும்பம்.
இச்செயற்திட்டத்தின் ஊடாக 260 குடும்பங்களின் இடர்போக்குகின்ற வல்வை வாழ் மக்களுக்கு. நம் உறவுக்கு நாமே கைகொடுப்போம் உறவுகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றோம்.