அம்பன் சூப்பர் புயல் காரணமாக வல்வை தீருவில் பெரிய கொலனி பகுதியில் வீதியின் குறுக்காக அடியோடு முறிந்த விழுந்த பனை மரம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் இன்று பிற்பகலில் காற்று வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.
இதன் காரணமாக இலங்கையின் வடக்கு பிரதேசங்களிலும் அதிகூடிய காற்று வீசுவதால் பெறுமதி மிக்க மரங்கள் கூரைத் தகடுகள் காற்றுடன் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
மின்னிணைப்பு வயர்,இளகிய நிலையிலும் கேபிள் டிவி வாயர் (Cable TV Wire) துண்டிக்கப்படும் இப்புயலானது சேதத்தை விளைவித்து உள்ளது.
அப்பகுதி வாழ் மக்களால் வீதி தடை அகற்றப்பட்டுள்ளது.