வல்வை செய்திகள்

பருத்தித்துறை (மந்திகை)ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நல விடுதி (Paediatric ward) விடுதி இலக்கம் – 08 இனை புனரமைப்பதற்காக  ரூபா 25 லட்சம் நன்கொடையாக புற்றளைப்பிள்ளையார் கோவிலடி அமரர் விஐயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகமார்த்தமாக வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி மாதவன் ஐயா வழங்கி வைத்துள்ளார்..

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் துரித அபிவிருத்தித் திட்டம் 2020 அரச வைத்தியசாலையாக இருந்தாலும்  மக்கள் பங்களிப்பில் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

புற்றளைப்பிள்ளையார் கோவிலடி அமரர் விஐயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகமார்த்தமாக வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி (மருமகன் மகள்) மாதவன் ஐயா, கீதா , (பேரப்பிள்ளைகள்) கோபிகா ,கீர்த்திகா ,சாருகா (Swiss) ஆகியோர்

பருத்தித்துறை (மந்திகை)ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நல விடுதி (Paediatric ward) விடுதி இலக்கம் – 08 இனை புனரமைப்பதற்காக  ரூபா 25 லட்சம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாதவன் ஐயா சைவ குருமாருக்கான நிதியுதவியில் பிரித்தானியா நலன்புரிச் சங்கம் வழங்கிய நிதியில் நாலில் ஒரு பகுதியினை இவர் வழங்கியுள்ளார். மற்றும் கொரோனா உலக நாடுகளில்  உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் நமது பிரதேசங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த வேளையில்    வல்வெட்டித்துறையின் அனைத்து பகுதிகளிலும் பாண் வழங்கி வைத்துள்ளார்.

இக் கொரோனா காலப்பகுதியில் அமைப்புகள் வழங்கிய நிதியுதவியிலும் அதிகமான நிதி உதவி வழங்கி சேவையினை வழங்கி வைத்துள்ளார்.

அவருக்கு வல்வெட்டித்துறை சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *