வல்வை செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார்.

இவரின் மரணத்தை தலங்கம வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் புதிதாக நியமனம் பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன், தோட்டத் துறையில் நடந்துகொண்டிருக்கும் இந்திய வீட்டமைப்புத் திட்டம் மற்றும் யாழ்ப்பாண கலாசார மையம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடியிருந்தார்.இவற்றினை இந்தியன் ஹை கமிஷனர் (Twitter)டீவுட்டர் வெளியிட்டுள்ள பகுதியிலும் பார்வையிடலாம்

அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் தமிழீழ தேசிய தலைவர் அவர்களையும் சந்தித்து பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *