யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயிடப்பட்டு 39 ஆண்டு நிறைவு நினைவேந்தல் தினம் இன்று 10.30 மணிக்கு நடைபெற்ற நினைவு நாளுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் தாங்கி நினைவேந்தல் நடைபெற்றது
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற கலாச்சார படுகொலை எனப்படுகின்றது.இருபத்தியோராம் நூற்றாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை போன்றது. இந்தக் கலாச்சார படுகொலையாகும்.
இதில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அரிய வகையை தமிழர்களின் பாரம்பரிய வரலாறுகளை கொண்ட புத்தகங்களும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும் எரிக்கப்பட்டவை. அதை போன்று ஈழநாடு பத்திரிகை அலுவலகம் பூபாலசிங்கம் புத்தகசாலை தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரனின் அவர்களின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
இதில் கரிகாலன் அண்ணா மக்கள் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்களின் மனைவியும் வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களும் வல்வெட்டித்துறை நகரசபை நகரபிதா கருணானந்தராசா அவர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் பொதுமக்கள் உதவியாளர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நினைவேந்தல் அஞ்சலி உணர்வுவெழிச்சி யுடன் நடைபெற்றது. ஒவ்வொருவரும் உரையாற்றுகையில் நினைவெழுச்சிகளை இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து முன்னெடுப்பதனால் தான் அடுத்த சந்ததியினருக்கும் இதனை கொண்டு செல்ல முடியும்.
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நிறுத்தி அங்கே நீதியை நிலைநாட்ட வேண்டும் பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்தல் வேண்டும் அதேபோல் இலங்கைக்குள் அரசியல் தீர்வு இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் இந்த இனப்படுகொலைக்கும் போர்க் குற்றங்களுக்கும் பரிகார நீதியாக ஒரு வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மாநிலத்திலே ஒரு பொதுஜன வாக்கெடுப்பை சர்வஜன வாக்கெடுப்பை ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும், என்பதை வலியுறுத்ததக்க நிலையிலே நாங்கள் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்கின்றோம்.என முன்னாள் வடமாகாண உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில் நினைவேந்தல் கருத்துரைகளையும் வழங்கி சென்றார்கள்.