சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரும் போராட்டத்தில் அனைவரும் கைகோருங்கள் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அழைப்பு 30.08.2020
இன்று வடக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து வலுச்சேர்ப்போம்.
நீதி கோரும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பொது அமைப்புகள் வெகுஜன அமைப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கட்சிப் பிரமுகர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.