வல்வை ஒன்றியத்தின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு, புத்தாண்டின் முதற் செயற்திட்டமாக ‘உதிரம் கொடுப்போம்;;’ ‘உயிரைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் 50 இற்கு மேற்பட்ட இரத்தக் கொடையாளர்களின் பங்களிப்புடன் வெகுவிமரிசையாக இரத்ததானம் நடைபெற்றது.
இவ் இரத்ததானமுகாமில் வல்வை ஒன்றியத்தின் நிர்வாகத்தினரும், வல்வை வாழ் மக்களும் இரத்தம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மற்றும் இந்நிகழ்ச்சியை மெருகூட்டுமுகமாக வல்வையில் குருதிக்கொடை சாதனையாளரான திரு து.சக்திவேல் அவர்கள் 40 வது தடவையாக இரத்ததானம் செய்து சிறப்பித்தார். இவருக்கு யாழ் இரத்தவங்கியினால் சிறப்புப் பரிசுப்பொருள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வைத்திய மாவட்ட வைத்திய அதிகாரி திரு மயிலேறும்பெருமாள், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆ.மு சிவாஜிலிங்கம் மற்றும் வல்வை நகரசபை உபதலைவர் திரு சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.