வெட்டப்பட்ட கைகளை பொருத்தி யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை
கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த ஒருவரின் கடந்த வாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த கையே இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.
இச்பிளாஸ்டிக்சத்திர சிகிச்சையை நிபுணர் இளஞ்செழியன் பல்லவனே தலைமைதாங்கி வெற்றிகரமாக பொருந்த வைத்துள்ளார்.
அத்துடன் நபர் ஒருவரின் அவயவம் துண்டிக்கப்பட்டால் அவரும் அவரின் அவயகமும் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தம்மோடு தொடர்பு கொண்டு உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அவ்அவயவம் பொருத்தப்படும்.
ரத்த நாளங்கள் நரம்புகள் சீராக பொருத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆன பின்னரே முழுமையாக சரிவரும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.