பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. CTP பேருந்தின் நடத்துநருக்கு கொரோனா!
புங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக கூறப்படும் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. பேருந்தின் நடத்துநருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு இன்று மேற்கொண்ட இரண்டாவது PCR பரிசோதனையை அடுத்து குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.கேதீஸ்வரன் தெரிவித்தார்.