வல்வை செய்திகள்

31ம் நாள் நினைவஞ்சலிஅமரர். “கலைப்பரிதி” இராசசேகரம் ஞானசுந்தரம்.(கட்டியண்ணா ,கட்டிமேத்திரியார்)

31ம் நாள் நினைவஞ்சலிஅமரர். “கலைப்பரிதி” இராசசேகரம் ஞானசுந்தரம்.(கட்டியண்ணா ,கட்டிமேத்திரியார்)

இராசசேகரம் ஞானசுந்தரம் − எனும்
நல்நாமம் கொண்டவர்
புராணமென்ன பண்ணென்ன − யாவும்
ஓதுவதில் வித்தகர்

நெடியகாட்டுப் பிள்ளையாரின்
நீண்டகால அடியவர்
அடியவரின் அரும்பணியால்
அகமகிழ்ந்தான் ஆனைமுகன்

வீதியுலா விநாயககர்க்கு
தேவார பாராயணம்
சுதியோடும் லயத்தோடும்
சுந்தரத்தின் லாவகம்

பெருங்கதைகள் படித்திடுவார் − பயன்
இனிதாய்க் கூறிடுவார்
அரியதொரு ஞானத்தால் − என்றும்
அவன்புகழே பாடிவந்தார்

ஊரிலுள்ள ஆலயங்கள்
ஊர்கடந்த கோவில்கள் − இவர்
செல்லாத இடமில்லை − அவர்
பாடாத பண்ணில்லை

“கலைப்பரிதி” விருதுபெற்றார் − பெற்ற
விருதுக்கும் விருதானார்
தலைக்கர்வம் ஏதுமின்றி
தன்பணியைத் தொடர்ந்திருந்தார்

பிறந்தார்கள் வாழ்வார்கள்− பிணி
மூப்போடு மறைவார்கள்
சிறந்தார்கள் ஓர்சிலர்தான்
மறைந்தாலும் வாழ்வார்கள்

வாழ்வார்கள் வரிசையிலே
வரம்பெற்றார் கட்டியண்ணா
ஆழ்ந்தநல் சிந்தையினால் − நம்
அகமதிலே அமர்ந்துகொண்டார்

வடமேற்குத் திசையினிலே
வாடியொன்று வைத்திருந்தார்
நடமாடாத் துணைவிக்கும்
நாளெல்லாம் பணிபுரிந்தார்

என்றென்றும் அவனடியே
தஞ்சமென வாழ்ந்திருந்தார்
இன்னுதன் வெற்றிடத்தை
ஈடுகட்ட மறந்துவிட்டார்

காற்றோடும் வானோடும்
கலந்துவிட்டார் கட்டியண்ணா
போற்றுகின்ற விநாயகரின்
பொற்பாதம் புகுந்துவிட்டார்.

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார்
ஆலய பரிபாலன சபையினர்,

கணபதி படிப்பகம்,

நெடியகாடு சமூகம்,

கணபதி மின் அமைப்பாளர்கள்,
வல்வெட்டித்துறை.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *