மரண அறிவித்தல்
ரூபமணி ஜெயக்குமார்

வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் கனடா ரொரொண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபமணி ஜெயக்குமார் அவர்கள் இன்று (25.11.2020) இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் திரு.கணேசரட்ணம் ஜெயக்குமார் அவர்களின் அன்பு மிகு மனைவியும்,
பொறியிலாளர்களான திரு.கிருஸ்ணா, திரு.முகுந்தன், திரு.கௌடில்யா ஆக்யோரின் அன்புத் தாயாரும், திருமதி.கீதா கிருஸ்ணா, திருமதி துவாரகா முகுந்தன், ரூபியின் சாயலைக் கொண்ட இனியா கிருஸ்ணாவின் பேர்த்தியும்,
காலம் சென்ற நடனசிகாமணி, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய இளைய புதல்வியும்,
மேல்நீதிம்ன்ற நீதிபதி காலம் சென்ற திரு.ந.யோகசிகாமணி, லண்டனில் காலம் சென்ற திரு.ந.சண்முகசிகாமணி, மற்றும் திருமதி. சிவகாமசுந்தரி திருநாவக்கரசு, கனடாவின் ஆவணக்காப்பக நிறுவுனர் திரு.ந.நகுலசிகாமணி, திருமதி அ.வனிதாமணி, திரு.ந.ஜெயவீரசிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதிரியும்,
திருமதி.யோ.பொன்மணி (கொழும்பு), திரு.க.திருநாவுக்கரசு (நில அளவையாளர்), திருமதி.ச.சந்திரபிரபா(லண்டன்), திருமதி.ந.உமாதேவி (கனடா), திரு.ந.அனந்தராஜ், திருமதி.ஜெ.சாந்தினி ஆகியோரின் மைத்துணியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ரெரறொன்ரேவில் நடைபெறவுள்ளது. விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
திரு.ந.அனந்தராஜ்
(மைத்துனர்)










