வல்வை செய்திகள்

யாழில் 12 வருடங்களின் பின் பெய்த பெரிய மழை. சுமார் 350mm மழை குறுகிய நேரத்தில் பெய்ததே வெள்ளக்காடு ஆனது .

யாழில் 12 வருடங்களின் பின் பெய்த பெரிய மழை. சுமார் 350mm மழை குறுகிய நேரத்தில் பெய்ததே வெள்ளக்காடு ஆனது .

இது சாதாரண மழை அல்ல. 12 வருடங்களின் பின் பெய்த பெரிய மழை. சுமார் 350mm மழை குறுகிய நேரத்தில் பெய்தது. யாழின் வருட மழை வீழ்ச்சியே 1250mm. வாய்க்கால்களில் பிரச்சனை பெரிதாக இல்லை. இருந்நிருந்தால் இன்றும் நீர் தேங்கியிருக்கும். குடாக் கடல் மட்டம் உயர்ந்ததால் நீர் உடனடியாக வடியவில்லை. கடல் நீர் குறைய யாழ் வெள்ளம் வடிந்தது.

ஆகவே பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பெய்கின்ற மழையையும் வருடத்தின் இறுதி மாதமான கார்த்திகை மார்கழி மாதங்களில் பெய்கின்ற மழையையும் வைத்து கணக்கிட முடியாது யாழ்ப்பாணத்திற்கு நன்னீர் விவசாய தண்ணீர் தேவையில்லை என்பதும்.

மற்றும் முதல்வர் ஆனல்ட் தலைமையில் விசேட குழு கள விஜயம் மேற்கொண்டு பல தடைகளை நீக்கியது.

புரெவி புயல் அசாதாரண நிலைமைகளை தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் விசேட குழு ஒன்று கள விஜயம் பலவற்றை யாழ் நகரில் மேற்கொண்டது.

அவ் விசேட குழுவின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைந்துள்ள மாநகர வடிகால் துப்பரவு செய்யும் பணிகளும் இடம்பெற்றது.

இவ் விஜயத்தில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர், யாழ் மாநகர பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *