மட்டக்களப்புக் கோட்டை அல்லதுமட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லதுமட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டை (1628)
மட்டக்களப்புக் கோட்டை அல்லதுமட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லதுமட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியந்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.
கோட்டையில் தற்போது கச்சேரி அமைந்துள்ளது
வரலாறு
கட்டிய காலம்
1628, 1638
பயன்பாட்டுக்
காலம்
1628 –
கட்டியவர்
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
கட்டிடப்பொருள்
கருங்கல், பாறை
காவற்படைத்தகவல்
தங்கியிருப்போர்
இலங்கை அரச நிர்வாகம்
காலவரிசைதொகுப்பு
ஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.
*1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது
*1628 – கட்டுமானம் நிறைவுற்றது
*1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது
*1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது
*1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது
*1682 – செப்பணிடப்பட்டது
*1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது
*1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது
*1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

















