வல்வை செய்திகள்

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் கம்பீரமான நுழைவாயில் திறப்புவிழாவும் 30.01.2021

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் கம்பீரமான நுழைவாயில் திறப்புவிழாவும்  ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் 30.01.2021 (சனிக்கிழமை) இன்று வித்தியாசாலையின் அதிபர் திரு.கி.கிருஸ்ணாகரன் அவர்களின் தலைமையில் மு.ப 09.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் (முன்னாள் வல்வை சிவகுரு வித்தியாசாலை)திரு.சி.ஜெயானந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

1969ம் ஆண்டு பிறந்து இப் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் அவர்களின் 50வது அகவை நினைவாக (2020) நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டது.

இந் நுழைவாயில் திறப்பு விழாவினைத் தொடர்ந்து 2019 – 2020 ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

சகல நிகழ்வுகளுக்கும் சுகாதார முறைப்படி நடைபெற்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *