05.05.2013 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு TSSA யின் 21 ஆவது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது
வல்வை புளுசின் பெரியோர்(Open) 2 அணிகள், 19 வயதிற்குற்பட்டோர் 1 அணி, 16 வயதிற்குற்பட்டோர் 1 அணி, 14 வயதிற்குற்பட்டோர் 2 அணிகள், 12 வயதிற்குற்பட்டோர் 2 அணிகள், 40 வயதிற்குமேற்பட்டோர் 1 அணி ஆக மொத்தம் வல்வை புளுசின் 9 அணிகள்; TSSA உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஞயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெற்றியை நோக்கமாக கொண்டு மைதானத்தில் விளையாடுவதற்கு தயாராகவுள்ளன.
சுற்றுப்போட்டி பற்றி கருத்து தெரிவித்த வல்வை புளுஸ் கழக தலைவர், அண்மை காலமாக சுற்றுப்போட்டிகளின் போது மைதானத்திற்கு சமுகம் தரும் வல்வையின் ஆதரவாளர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளதா தெரிவித்தவர். மைதானத்தில் வல்வை மக்களின் ஆதரவுக்கோசம் வல்வை புளுஸ் அணிகளின் வெற்றிக்கு மிக முக்கிய உந்து சக்தி என்பதால் மிக அதிகமான வல்வையின் ஆதரவாளர்கள் சுற்றுப்போட்டியின் போது மைதானத்திற்கு சமுகம் தந்து வல்வை புளுஸ் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Warren Farm Sports Center, Windmill lane
Southall, Middlesex, UB2 4NE