கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தீச்சட்டி போராட்டம்
கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தீச்சட்டி போராட்டம்
இப் போராட்டமானது சர்வதேசத்தை நோக்கிய ஒரு போராட்டமாகவே காணப்படுகின்றது ஏனெனில் இலங்கை அரசாங்கத்தை நம்பி எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை தங்களுடைய பிள்ளைகளை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்.
தமது பிள்ளைகளை பரிகொடுத்த கையளித்த தாய்மார்கள் இப்போராட்டத்தில் மிகப்பெரும் அளவில் கலந்து சார்வ தேசத்தை நோக்கி, ஐ.நா வை நோக்கி தங்கள் பிள்ளைகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோர்களினால் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது இப் போராட்டமானது நான்கு வருடங்களை தாண்டியும் தமக்கான நீதி கிடைக்கவில்லை எனவே இந்த வருடம் கூடுகின்ற ஐநா சபை இதற்கான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பார்க்கின்றபோது மெய்சிலிர்க்க வைத்தது அலை அலையென மக்கள் பெற்றோர்கள் தீச்சட்டி தலையில்,கையில் ஏந்தியவாறு தமது பிள்ளை பெற்றுத்தர வேண்டும் என்னும் கோசங்களை முன்வைத்தார்.
தன் மகனை கையளித்தேன் எங்கே தன்னுடைய மகன்
எங்கள் அப்பாவை கையளித்தோம் எங்கே எங்கள் அப்பா என்ன பிள்ளைகள் பெற்றோர்கள் சகோதரர்கள் சகோதரிகள் உறவினர்களின் அலறலும் கோஷங்களும் கிளிநொச்சி மண்ணின் காதை கிழிக்க வைத்தது எமது குரல் ஜ.நா. வரைக் கேட்க வேண்டும் எங்கள் குரலை நீங்கள் அனைவரும் எடுத்துச் செல்லுங்கள் நமது உறவுகளே எமது அன்பார்ந்த நாடுகளே என பலவாறு கோஷங்கள் முழங்க கிளிநொச்சி மண் அதிர்ந்த வண்ணம் இருந்தது இருந்தது.
ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்பை பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















