6 வயதில் உலக சாதனை படைத்து வல்வையரை பெருமை கொள்ள வைத்துள்ளான் சிறுவன் விஷ்ணு!!!



ஒரு நிமிடத்திற்கான, கேள்வி பதில் 68, நாடுகளின் பெயர்களை ஆங்கில மொழியில் கூறி உலக சாதனை படைத்துள்ளார் சிறுவன் விஷ்ணு.
கனடா நாட்டில் மின்வலைத்தளத்தினூடாக உலகம் தழுவிய ரீதியில் 4 வயதிலிருந்து 6 வயதுனர் கலந்து கொண்ட. ஒரு நிமிடத்துக்கான கேள்வி பதில் போட்டியில். சுவிஸ் நாட்டில் நுசத்தல் மாநிலத்தில் இருந்து வல்வையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தராஜா மைதிலி தம்பதிகளின் புதல்வன் விஷ்ணு என்ற சிறுவனே இந்த சாதனையை செய்துள்ளார். உலக நாடுகளின் கொடிகளை பார்வையிட்டு ஒரு நிமிடத்தில் 68, நாடுகளின் கொடிகளின் பெயர்களை சரியாக முறையே ஆங்கில மொழியில் கூறி உலக சாதனை படைத்தான் சிறுவன் விஷ்ணு. இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சிறுவன் 52 நாடுகளை மட்டும் கூறி இரண்டாவதாக இடத்தினைப் பெற்றது சிறுவன் விஷ்ணு பெற்ற வெற்றி இங்கு சிறப்பானது.
அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்று தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ள சிறுவன் விஷ்ணு. வல்வை கவிஞரில் ஒருவரான பாவலர் சுப்பிரமணியம் சுயேன்திரன் (Pavalar valvai suyen suyenthiran) அவர்களின் பேரன் என்பதும், அசிற்மணியத்தின் பூட்டனும் என்பது குறிப்பிடத்தக்கது.










